நீலகிரியில் நிலைதடுமாறி ஆற்றில் விழுந்த காட்டெருமை உயிரிழப்பு

நீலகிரி : குன்னூர் கரன்சி எஸ்டேட் பகுதியில் உலா வந்து கொண்டிருந்த காட்டெருமை, நிலை தடுமாறி ஆற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது.


நீலகிரி : குன்னூர் கரன்சி எஸ்டேட் பகுதியில் உலா வந்து கொண்டிருந்த காட்டெருமை, நிலை தடுமாறி ஆற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது.

உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் போன்ற பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட காட்டெருமைகள் அவ்வப்போது சாலைகளில் உலா வருவது வழக்கம். அண்மைக் காலமாக இவை குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்து, பொதுமக்களை அச்சுறுத்துவதும், தேயிலைத் தோட்டம் போன்ற பகுதிகளில் பணியாளர்களைத் தாக்கி வருவதும் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், இன்று காலை குன்னூர் கரன்சி பகுதியில் உள்ள டான் டீ தேயிலை எஸ்டேட் பகுதியில் காட்டெருமை மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது, அங்கிருந்த ஒத்தையடி பாதையில் நடக்கும் போது, அருகில் இருந்த ஓடையில் கால் தவறி விழுந்தது. இதில், பலத்த காயடைந்த காட்டெருமை, வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டது. 

இதனைக் கேட்டு அங்கு குவிந்த பொதுமக்கள், குன்னூர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து அப்பகுதிக்கு விரைந்து வந்த வனத்துறையினர், காட்டெருமை உயிரிழந்ததை உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து, உடலை பிரேத பரிசோதனை செய்து அங்கேயே புதைத்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...