சென்னை : முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோவில் இடம்பெற்றுள்ள தகவல்கள் உண்மையில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், கோடநாடு எஸ்டேட்டின் காவலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விவரங்கள் அடங்கிய ஆவணப்படத்தை தெகல்ஹா முன்னாள் ஆசிரியர் சாமுவேல் மேத்யூஸ் டெல்லியில் நேற்று வெளியிட்டார். கோடநாடு எஸ்டேட்டில், 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நகை, பணம் இருந்ததாகவும் அந்த ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த கொள்ளையில் ஈடுபட்ட ஷயான் என்பவரின் மனைவி, குழந்தை, உட்பட 5 பேர் மர்மமாக உயிரிழந்தனர். இதன்பிறகு ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர், கனகராஜும் விபத்தில் கொல்லப்பட்டார். கோடநாட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கனகராஜ் யாருக்காக இதை செய்தார்..? என்றும், இந்த சம்பவத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சில அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் சாமுவேல் மேத்யூஸ் தனது ஆவணப்படத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆவணப்படத்திற்கு ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் மறுப்பு தெரிவித்து வந்தாலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ”கோடநாடு கொள்ளை தொடர்பாக வெளியான வீடியோவில் சொல்லப்பட்ட தகவல்கள் உண்மையில்லை. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மேல் களங்கம் கற்பிக்கும் வகையில், இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்," என்றார்.