திருப்பூர் : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை திருப்பூரில் அரசுப் பள்ளி மாணவர்கள் கலாச்சார உடையணிந்து உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

தமிழர்களின் பண்டிகைகளில் மிகவும் சிறப்புமிக்க பண்டிகையாக திகழ்வது பொங்கல் பண்டிகையாகும். வரும் 15-ம் தேதி தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளதால், 14-ம் தேதி முதலே அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதனையொட்டி, பள்ளி இறுதி வேலைநாளான இன்று திருப்பூர் நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொங்கல் விழா நடைபெற்றது.
இதில், பள்ளி மாணவர்கள் கலாச்சார உடையான வேட்டி சட்டை அணிந்து ஆசிரியர்களோடு சேர்ந்து மாணவர்களும் பொங்கல் வைத்து வழிபட்டனர். மேலும், பாரம்பரிய விளையாட்டுக்களான உரியடித்தல், கபடி, பூப்பறித்தல், கும்மியாட்டம், ஒயிலாட்டம் ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

"நகர்ப்புற மாணவர்களிடையே மறைந்து வரும் தமிழர்களின் கலாச்சாரமான பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் விதமாக, பள்ளிக் கல்வித்துறையிடம் அனுமதி பெற்று, இந்தாண்டு முதல்முறையாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதனால், மாணவர்கள் பண்டைய தமிழ் பாரம்பரியத்தை தெரிந்துகொள்வதோடு, மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையிலாக அமையும்," என பள்ளி தலைமையாசிரியர் கூறினார்.