நீலகிரி : கோத்தகிரி பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில் காட்டெருமைகள் உலா வருவதால் தொழிலாளர்கள் பணிக்கு செல்ல அச்சமடைந்து வருகின்றனர்.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில், அவ்வப்போது வனவிலங்குகள் ஊருக்குள் வருவது வாடிக்கை. இதனால், தேயிலை தோட்டங்களிலும், விவசாயம் செய்யும் நிலங்களிலும் சேதம் ஏற்படுகிறது. இந்நிலையில், தற்போது காட்டெருமைகள் கூட்டம் கூட்டமாக உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார கிராம பகுதிகளான, மஞ்சூர், குந்தா, தூதர்மட்டம், சேலாஸ் போன்ற பகுதிகளில் உலா வருகிறது.

இதையடுத்து, வேலைக்கு செல்பவர்கள் வனப்பகுதியில் உள்ள சாலை வழியே பணிக்கு செல்லும் போது வன விலங்குகள் தாக்குதலுக்கு ஆளாவதோடு, சில சமயங்களில் உயிர் சேதமும் ஏற்படுகிறது.இந்நிலையில், குன்னூர், கோத்தகிரி, முக்கிய சாலையின் ஓரத்தில் உள்ள தேயிலை தோட்டங்களில் காட்டெருமைகள் கூட்டமாக உலா வரத் தொடங்கியுள்ளன.
இதனால், தேயிலை தோட்டங்களில் வேலைக்கு செல்ல தொழிலாளர்கள் அச்சமடைந்து வருகின்றனர். அசம்பாவிதங்கள் நடக்கும் முன் வனத்துறையினர் இவற்றை அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் துரத்த வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.