திருப்பூர் : திருப்பூரில் வயதான தம்பதியினை தாக்கிக் கொள்ளையடித்த சம்பவத்தில் முதியவர் பலி மற்றும் மூதாட்டி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம், கோவில்பாளையத்தில் தேங்காய் கள உரிமையாளர் கருப்பட்டி பழனிச்சாமி. இவரது மனைவி மாராத்தாள். கோவில்பாளையம் பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று வழக்கம்போல தேங்காய் கள பணிகளை முடித்து இருவரும் உறங்கச் சென்றுள்ளனர். இந்நிலையில், இன்று காலை அவர்கள் தோட்டத்து மாடுகளிடம் பால் கறக்கச் சென்ற பால்காரர் வீடு திறந்து கிடந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதையடுத்து, உள்ளே சென்று பார்த்தபோது கருப்பட்டி பழனிச்சாமி அடிபட்டு இறந்துள்ளார். அவரது மனைவி மாரத்தாள் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்திருக்கிறார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியோடு மாரத்தாள் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தை அடுத்து எவ்வளவு கொள்ளை போனது என்பது குறித்தும், இச்சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம கும்பல் குறித்தும் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.