கோவை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் விஸ்வாசம் திரைப்படம் திட்டமிட்டபடி நாளை ரிலீஸ்

கோவை : கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் விஸ்வாசம் திரைப்படம் நாளை திட்டமிட்டபடி வெளியிடலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


கோவை : கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் விஸ்வாசம் திரைப்படம் நாளை திட்டமிட்டபடி வெளியிடலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடித்துள்ள 'விஸ்வாசம்' திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், ஃபைனான்சியர் உமாபதி, விஸ்வாசம் படத்திற்கு தடை விதிக்கக்கோரி வழக்கு தொடர்ந்தார். படத் தயாரிப்பு நிறுவனம் தன்னிடம் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்கவில்லை. எனவே, படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். 

இந்த மனு மீதான விசாரணை இறுதியில், கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் விஸ்வாசம் படம் வெளியாவதற்கு நீதிமன்றம் தடை விதித்தது. அப்போது, கடனை திருப்பி அளிக்கிறோம் என்றும், ஆனால், விஸ்வாசம் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை உடனடியாக நீக்க வேண்டும் என தயாரிப்பு நிறுவனம் கோரியதற்கு, அதனை மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்வோம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்த நிலையில், படத்தயாரிப்பு நிறுவனம் தரப்பில், பைனான்சியருக்கு கொடுக்க வேண்டிய ரூ.78 லட்சம் கடன் பாக்கியில் ரூ.35 லட்சத்தை இன்றே வழங்குவதாகவும், மீதித்தொகையை அடுத்த 4 வாரங்களில் தருகிறோம் என உத்தரவாதம் அளித்தனர். இதையடுத்து, விஸ்வாசம் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

இதனால், விஸ்வாசம் திரைப்படம் நாளை திட்டமிட்டபடி அனைத்து பகுதிகளிலும் வெளியாகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...