நீலகிரி : குன்னூர் அருகே முத்திரி எஸ்டேட் குழந்தைகள் காப்பகத்தில் தரையில் படுக்க வைத்திருந்ததைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே முத்திரி எஸ்டேட் குழந்தைகள் காப்பகத்தில் மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா இன்று ஆய்வு பணி்யில் ஈடுபட்டார். அப்போது குழந்தைகளை தரையில் படுக்க வைத்திருந்ததால் அதிருப்தி அடைந்தார்.

இதையடுத்து, எந்த அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்காமல் பீகார், ஒரிசா, ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த குழந்தைகளைத் தரையிலே படுக்க வைத்த எஸ்டேட் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும், எடுத்த நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.