பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கைத்தறி பட்டு சேலைகள் விற்பனை அதிகரிப்பு : கோவை நெசவாளர்கள் மகிழ்ச்சி

கோவை : பட்டுச்சேலை உற்பத்தியில் தனியிடம் பிடித்துள்ள சிறுமுகை பகுதியில், வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கைத்தறி பட்டு சேலை உற்பத்தி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை : பட்டுச்சேலை உற்பத்தியில் தனியிடம் பிடித்துள்ள சிறுமுகை பகுதியில், வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கைத்தறி பட்டு சேலை உற்பத்தி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.



கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள சிறுமுகை பகுதியில் சுமார் 3000 ஆயிரம் குடும்பங்கள் கைத்தறி நெசவுப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இங்கு தயாராகும் கைத்தறி பட்டு ரகங்கள் ஆண்டுக்கு ரூ.120 கோடி அளவிற்கு விற்பனையாகி வருகிறது. கைத்தறி மூலம் காட்டன், கோரா காட்டன், சாப்ட் சில்க் எனப்படும் மென்பட்டு சேலை ரகங்கள் நெய்யப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இதனுடைய உற்பத்தியும், விற்பனையும் அதிகரித்துள்ளது. இதற்கெனவே, புத்தம் புதிய டிசைன்களில், பல்வேறு வண்ணங்களில் சுமார் 400 -க்கும் மேற்பட்ட மென்பட்டு கைத்தறி சேலைகள் தயாராகி வருகின்றன. 

இதனிடையே, முழுவதும் மனித உழைப்பால், கைத்தறி நெசவாளர்களின் கை தேர்ந்த கலை வண்ணத்தை உணர்த்தும் வகையில் நெய்யப்படும் கைத்தறி மென்பட்டு சேலைகள் காஞ்சிபுரம் பட்டு சேலைகளை விட எடையும் விலையும் குறைவு. மேலும், பாதுகாப்பதும் எளிது. நீடித்து உழைக்கக் கூடியது. 



இதனால், சிறுமுகை கைத்தறி பட்டு ரகங்கள் யாவும் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மற்றும் மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுக்கின்றன. தற்போது கம்யூட்டர் மூலம் டிசைன் செய்யப்பட்டு பின்னர் கைத்தறி மூலம் பட்டு சேலைகள் தயார் செய்யப்படுவதால், இளம் பெண்கள் இவற்றை வாங்கி அணியப் பெரிதும் விரும்புவதாக நெசவாளர்கள் தெரிவிக்கின்றனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...