கோவை : கோவையில் நகை உற்பத்தியாளர்களும், விற்பனையாளர்களும் சந்திக்கும் 3 நாள் கண்காட்சி லீ மெரிடின் நட்சத்திர விடுதியில் இன்று தொடங்கியது.

கோவையில் அனைத்திந்திய நகை மற்றும் ரத்தினங்கள் கவுன்சில் மற்றும் ப்ரீபெர்டு மெனிபேக்கரர் ஆப் இந்தியா இணைந்து நடத்திய ஆபரண கண்காட்சி இன்று தொடங்கியது. இந்தக் கண்காட்சியில் ஆபரணங்கள் உற்பத்தி, விற்பனை ஆகியவை தொடர்பான வியாபார ஆலோசனைகளும், விற்பனையும் நடைபெறும்.

புத்தாண்டையொட்டி நடைபெறும் இக்கண்காட்சி, ஏற்கனவே புனே, ஹைதராபாத், கோவா, ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களில் நடத்தப்பட்டுள்ளது. இன்று லீ மெரிடின் நட்சத்திர விடுதியில் தொடங்கிய கண்காட்சி வரும் 10 -ம் தேதி வரை நடைபெறும். இதில் மொத்தம் 150 நகை உற்பத்தியாளர்களும், விற்பனையாளர்களும் பங்கேற்றுள்ளனர்.

இதுகுறித்து அனைத்திந்திய நகை மற்றும் ரத்தினங்கள் கவுன்சில் அனந்த் பத்மநாபன் கூறியதாவது :- இந்தக் கண்காட்சி நகை உற்பத்தியாளர்கள் மற்றும் ஜூவல்லரி நடத்துபவர்கள் சந்தித்து தங்களின் வியாபாரத்தை விரிவாக்கிக் கொள்ள உதவும். மேலும், நகை உற்பத்தியாளர்களுக்கும், ஜூவல்லரி முதலாளிகளுக்கும் இடையே நல்ல புரிதலையும், வர்த்தக அபிவிருத்தியும் செய்து கொடுக்கும் வாய்ப்பு அதிகம், இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து துணைத்தலைவர் சங்கர் சென் கூறியதாவது :- இந்தக் கண்காட்சி நகை உற்பத்தி மற்றும் விற்பனை தொடர்பான அனைத்து வர்த்தகத்துக்கும் மையம் ஆகும். இதனால் நகை உற்பத்தித் துறையில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நவநாகரீக நகைகள் குறித்து அறிந்து கொள்ள முடியும். மேலும், இந்தக் கண்காட்சி நடத்துவதன் முக்கிய நோக்கமே நகை விற்பனையை நாடு முழுவதும் அதிகப்படுத்துவதே ஆகும், என்றார்.