திமுக மற்றும் கேரள முதல்வர் இணைந்து தீட்டிய திட்டத்தினால் தான் பெண்கள் சபரிமலைக்கு சென்றனர் - அர்ஜீன் சம்பத்

திருப்பூர்: சபரிமலைக்கு பெண்கள் செல்லும் திட்டமே தமிழகத்தில் கலைஞர் சிலை திறப்பு விழாவில்தான் திட்டம் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளதாக திருப்பூரில் இந்து மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் அர்ஜீன் சம்பத் தெரிவித்தார்.


திருப்பூர்: சபரிமலைக்கு பெண்கள் செல்லும் திட்டமே தமிழகத்தில் கலைஞர் சிலை திறப்பு விழாவில்தான் திட்டம் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளதாக திருப்பூரில் இந்து மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் அர்ஜீன் சம்பத் தெரிவித்தார்.

சபரிமலைக்கு பெண்கள் சென்ற நிலையில் சபரிமலையின் புனிதம் கெட்டுவிட்டதாக பல்வேறு இந்து அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் சபரிமலைக்கு பெண்கள் செல்வதால் சபரிமலையில் உள்ள எரிமேலி பகுதியில் உள்ள பாபர் மசூதிக்கும் பெண்களை அனுமதிக்க வேண்டும் எனக்கோரி இந்து மக்கள் கட்சியினரின் மகளிர் அமைப்பினரை அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 



இந்நிலையில் திருப்பூர் வடக்கு காவல்நிலையத்தில் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட இந்து மக்கள் கட்சியினரை சந்திக்க வந்தபோது அக்கட்சியின் தலைவர் அர்ஜீன் சம்பத் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், "பாபர் மசூதி செல்லும் பெண்களை முன்னதாக திருப்பூர் காவல்துறையினர் கைது செய்ததாகவும், மாற்று வழியாக வாளையாறு வரை சென்ற பெண்களையும் காவல் துறை செல்ல விடாமல் தடுத்ததாகவும் இதனை கண்டிப்பதோடு மனித அமைப்பு கம்யூனிச சிந்தனையோடு இருப்பதால் கலைஞர் சிலை திறப்பு விழாவிற்கு வந்த பினராயி விஜயன் திமுகவுடன் கைகோர்த்து திட்டம் தீட்டி சபரிமலைக்கு பெண்களை அழைத்துச்சென்றிருப்பதாக," கூறினார். 

அதேபோல் இந்து மக்கள் கட்சியின் மகளிர் அணியினரையும் பாபர் மசூதிக்கு அனுப்ப வேண்டும் எனவும் அவர்களை தடுக்கும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியிருப்பதாக தெரிவித்தார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...