திருப்பூர்: சபரிமலைக்கு பெண்கள் செல்லும் திட்டமே தமிழகத்தில் கலைஞர் சிலை திறப்பு விழாவில்தான் திட்டம் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளதாக திருப்பூரில் இந்து மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் அர்ஜீன் சம்பத் தெரிவித்தார்.
திருப்பூர்: சபரிமலைக்கு பெண்கள் செல்லும் திட்டமே தமிழகத்தில் கலைஞர் சிலை திறப்பு விழாவில்தான் திட்டம் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளதாக திருப்பூரில் இந்து மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் அர்ஜீன் சம்பத் தெரிவித்தார்.
சபரிமலைக்கு பெண்கள் சென்ற நிலையில் சபரிமலையின் புனிதம் கெட்டுவிட்டதாக பல்வேறு இந்து அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் சபரிமலைக்கு பெண்கள் செல்வதால் சபரிமலையில் உள்ள எரிமேலி பகுதியில் உள்ள பாபர் மசூதிக்கும் பெண்களை அனுமதிக்க வேண்டும் எனக்கோரி இந்து மக்கள் கட்சியினரின் மகளிர் அமைப்பினரை அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் திருப்பூர் வடக்கு காவல்நிலையத்தில் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட இந்து மக்கள் கட்சியினரை சந்திக்க வந்தபோது அக்கட்சியின் தலைவர் அர்ஜீன் சம்பத் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், "பாபர் மசூதி செல்லும் பெண்களை முன்னதாக திருப்பூர் காவல்துறையினர் கைது செய்ததாகவும், மாற்று வழியாக வாளையாறு வரை சென்ற பெண்களையும் காவல் துறை செல்ல விடாமல் தடுத்ததாகவும் இதனை கண்டிப்பதோடு மனித அமைப்பு கம்யூனிச சிந்தனையோடு இருப்பதால் கலைஞர் சிலை திறப்பு விழாவிற்கு வந்த பினராயி விஜயன் திமுகவுடன் கைகோர்த்து திட்டம் தீட்டி சபரிமலைக்கு பெண்களை அழைத்துச்சென்றிருப்பதாக," கூறினார்.
அதேபோல் இந்து மக்கள் கட்சியின் மகளிர் அணியினரையும் பாபர் மசூதிக்கு அனுப்ப வேண்டும் எனவும் அவர்களை தடுக்கும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியிருப்பதாக தெரிவித்தார்.