கம்பளி போர்வை தொழிலாளி கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை : கோவையில் கம்பளி போர்வை தொழிலாளியை கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து இன்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கோவை : கோவையில் கம்பளி போர்வை தொழிலாளியை கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து இன்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் சுகேல் இந்திரபால் மற்றும் அமித் குமார். இவர்கள் கடந்த வருடம் குனியமுத்தூர் பகுதியில் கம்பளி போர்வை விற்பனை செய்து வந்தனர். இதையடுத்து, கடந்த ஜனவரி மாதம் 15 -ம் தேதி விற்பனைக்குச் சென்று விட்டு மதிய வேளையில் சாப்பிட ஓட்டல் தேடி அலைந்துள்ளனர். அப்போது ஓட்டலுக்குச் செல்ல கார்த்திக் ராஜா என்பவரிடம் வழி கேட்டுள்ளனர். 

இந்நிலையில், கார்த்திக் பணத்தை தன்னிடம் கொடுத்தால் ஓட்டலுக்கு அழைத்துச் செல்வதாக கூறியுள்ளார். அப்போது சுகேல், தன் நண்பர்களிடம் அவனிடம் ஏன் பணத்தை கொடுக்க வேண்டும். நாமே தேடிக் கொள்ளலாம் என இந்தியில் பேசியுள்ளார். அதனைக் கேட்ட கார்த்திக் ராஜா தன்னைக் கிண்டல் செய்வதாகத் தவறாக புரிந்து கொண்டார். இதையடுத்து, ஆத்திரத்தில் சுகேலின் பின் மண்டையில் பலமாக அடித்துள்ளார். இதனால் சுகேல் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். 

இது தொடர்பாக குனியமுத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆய்வாளர் டி.எச்.கணேஷ் மேற்கொண்டு விசாரணையை நடத்தி கோவை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார். மேலும், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குணசேகரன் கார்த்திக் ராஜாவுக்கு ஆயுள் தண்டனையும் அளித்து இன்று தீர்ப்பளித்தார். 

Newsletter

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...