கோவையில் வயரிங் பணி குறித்த ஆன்லைன் விளம்பரப் பலகையை அகற்றிய மின்சார ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு

கோவை : பொதுமக்கள் வயரிங் வேலை செய்வதற்காக, ஆன்லைனில் விண்ணப்பிக்க வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகைகளை அகற்றிய மின்சார ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஒப்பந்தார சங்கத்தினர் மனு அளித்துள்ளனர்.

கோவை : பொதுமக்கள் வயரிங் வேலை செய்வதற்காக, ஆன்லைனில் விண்ணப்பிக்க வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகைகளை அகற்றிய மின்சார ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஒப்பந்தார சங்கத்தினர் மனு அளித்துள்ளனர். 

கோவை மாவட்ட தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், மின் உரிமம் வழங்கும் வாரியத்தில் முறையாக உரிமம் பெற்று வீடு, கடைகள், தொழிற்சாலைகளுக்கு வயரிங் வேலை செய்து வருகிறது. மேலும், சங்க உறுப்பினர்கள் சின்னியம்பாளையம் பகுதிகளில் உள்ள மின்வாரிய அலுவலங்களில் இணையம் வழியாக விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களை அணுகலாம் என வைக்கப்பட்டிருந்த தகவல் பலகைகளை மின்வாரிய ஊழியர்கள் அகற்றி உள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். 



இது குறித்து உதவி பொறியாளர்களிடம் கேட்கையில், "பொதுமக்கள் இணையம் மூலம் விண்ணப்பித்தால் ஆதாயம் இல்லை. இது உயர் அதிகாரிகளின் உத்தரவு," என தெரிவித்தனர். மேலும் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து எளிய முறையில் இணைப்பு பெறலாம் என அரசும் வாரியமும் ஆணை பிறப்பித்துள்ள நிலையில், அதிகாரிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெற வேண்டாம் என கூறி வருகின்றனர். 

இதையடுத்து, அரசு ஊழியர்கள் பொதுமக்களுக்கு குந்தகம் விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என தெரிவித்தனர். மேலும், பொதுமக்கள் ஆன்லைன் விண்ணப்பங்கள் செய்ய வைக்கப்பட்டிருந்த தகவல் பலகைகளை அகற்றி, மின்வாரிய உத்தரவை மீறி மின்சார ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...