கோவையில் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த குடும்பம் : சிறுமியின் தந்தை மற்றும் சித்தப்பா கைது

கோவை : கோவையில் 13 வயது சிறுமி அளித்த பாலியல் வன்கொடுமை புகாரின் பேரில், அவரது தந்தை மற்றும் சித்தப்பா ஆகியோர் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். மேலும், தலைமறைவாக உள்ள சிறுமியின் தந்தையின் இளைய சகோதரரை போலீசார் தேடி வருகின்றனர்.



கோவை : கோவையில் 13 வயது சிறுமி அளித்த பாலியல் வன்கொடுமை புகாரின் பேரில், அவரது தந்தை மற்றும் சித்தப்பா ஆகியோர் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். மேலும், தலைமறைவாக உள்ள சிறுமியின் தந்தையின் இளைய சகோதரரை போலீசார் தேடி வருகின்றனர். 

கோவையின் பல்வேறு பகுதிகளில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக குழந்தைகளுக்கு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதில், நல்ல எண்ணத்தில் தொடுதல் (Good Touch), தீய எண்ணத்தில் தொடுதல் (Bad Touch) குறித்தும் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில் தெலுங்குப்பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதன்மூலம், விழிப்புணர்வு பெற்ற 8-ம் படிக்கும் 13 வயது சிறுமி ஒருவர் கடந்த 2016-ம் ஆண்டு முதல் தனது தந்தை மற்றும் தந்தையின் சகோதரர்கள் இருவரால் பாலியில் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருவதாக ஆசிரியர்கள் உதவியுடன் செல்வபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.



இதனையடுத்து, மாணவியை குழந்தைகள் இல்லத்தில் அதிகாரிகள் சேர்த்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கோவை மாநகர காவல்துறை, சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த சிறுமியின் தந்தை இயேசு ராஜன் (38), சித்தப்பாக்கள் இயேசு ராஜா (28), டேவிட் (23) ஆகியோர் மீது போஸ்கோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். இதில் தந்தை உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருக்கும் டேவிட்டை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...