மேட்டுப்பாளையத்தில் துணிப்பைகளை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்திய தன்னார்வ அமைப்புகள்

கோவை : மேட்டுப்பாளையத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்க்க பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, துணிப்பைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


கோவை : மேட்டுப்பாளையத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்க்க பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, துணிப்பைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

உடல் நலத்தையும், மண்ணின் வளத்தையும் அழித்துக் கொண்டிருக்கும் நெகிழி (பிளாஸ்டிக்) பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் வகையிலும், மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும் விதமாகவும், பொருட்கள் வாங்க துணிப்பையை பயன்படுத்த வலியுறுத்தி மேட்டுப்பாளையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

மேட்டுப்பாளையம் நகராட்சி, காவல்துறை, நம்ம மேட்டுப்பாளையம் தன்னார்வ அமைப்புகள் ஆகியவை இணைந்து பொதுமக்கள் கூடும் இடங்களான பேருந்து நிலையம், நகராட்சி வணிகவளாகங்கள், உழவர் சந்தை, மார்க்கெட் போன்ற பகுதிகளில் பொதுமக்களுக்கு துணிப் பைகளை வழங்கியும், எந்தெந்தப் பொருட்களை உபயோகப்படுத்தக் கூடாது என்ற படிவத்தையும் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில், நகராட்சி பொறியாளர் கணேசன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் செந்தில், ஜெயராமன், போக்குவரத்து உதவி ஆய்வாளர் முரளி உட்பட பல்வேறு சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...