கோவை : மேட்டுப்பாளையத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்க்க பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, துணிப்பைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கோவை : மேட்டுப்பாளையத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்க்க பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, துணிப்பைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
உடல் நலத்தையும், மண்ணின் வளத்தையும் அழித்துக் கொண்டிருக்கும் நெகிழி (பிளாஸ்டிக்) பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் வகையிலும், மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும் விதமாகவும், பொருட்கள் வாங்க துணிப்பையை பயன்படுத்த வலியுறுத்தி மேட்டுப்பாளையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மேட்டுப்பாளையம் நகராட்சி, காவல்துறை, நம்ம மேட்டுப்பாளையம் தன்னார்வ அமைப்புகள் ஆகியவை இணைந்து பொதுமக்கள் கூடும் இடங்களான பேருந்து நிலையம், நகராட்சி வணிகவளாகங்கள், உழவர் சந்தை, மார்க்கெட் போன்ற பகுதிகளில் பொதுமக்களுக்கு துணிப் பைகளை வழங்கியும், எந்தெந்தப் பொருட்களை உபயோகப்படுத்தக் கூடாது என்ற படிவத்தையும் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், நகராட்சி பொறியாளர் கணேசன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் செந்தில், ஜெயராமன், போக்குவரத்து உதவி ஆய்வாளர் முரளி உட்பட பல்வேறு சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.