கோவை : சபரிமலையில் பெண்கள் நுழைந்த விவகாரத்தைக் கண்டித்து கேரள முதல்வரின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற நாம் இந்துக்கள் அமைப்பினர் 8 பேர் மீது போலீசார் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் தரிசனம் செய்ய அனுமதியளித்து உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் சபரிமலைக்குச் செல்ல முயன்று திருப்பி அனுப்பப்பட்ட கேரளத்தைச் சேர்ந்த பிந்து, கனகதுர்கா ஆகியோர் ஜனவரி 2 -ம் தேதி அதிகாலையில் கோயிலுக்குள் நுழைந்து சாமி தரிசனம் செய்தனர்.
இதையடுத்து, தமிழகம், கேரளத்தில் உள்ள இந்து அமைப்புகள் தொடர் கண்டன போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும், கேரளத்தில் உள்ள இந்து அமைப்புகள் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்ததை அடுத்து,கோவையில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை.
இந்நிலையில், கோவை மாவட்டம் சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகே நாம் இந்துக்கள் கட்சி சார்பில் கேரள அரசைக் கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அமைப்பினர், கேரள முதல்வர் பினராயி விஜயனின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர்.
இதனைத் தொடர்ந்து உருவ பொம்மையை எரிக்க முயன்ற இந்து அமைப்பின் மாவட்டத்தலைவர் கார்த்திக், இளைஞரணித் தலைவர் லோட்டஸ் மணிகண்டன், செயலாளர் கனகராஜ், இளைஞரணிச் செயலாளர் கௌதம் உள்ளிட்ட 8 பேரை சிங்காநல்லூர் போலீசார் கைது செய்தனர்.
மேலும், சிங்காநல்லூர் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஹாலன் கொடுத்த புகாரின் அடிப்படையில் இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 147, 353, 506(I) , 285 - 511 ஆகிய 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.