விஜய மல்லையாவை தேடப்படும் பொருளாதார குற்றவாளி எனவும், அவரது சொத்துக்களை அரசாங்கம் கையகப்படுத்தலாம் எனவும் சிறப்பு நீதிமன்றம் அறிவித்திருக்கிறது.

அமலாக்கப் பிரிவு தொடர்ந்த வழக்கில் மும்பையில் உள்ள சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு நீதிமன்றம் இத்தீர்ப்பினை வழங்கியிருக்கிறது. பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்ற தொழிலதிபர் விஜய மல்லையா அதனை திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்குத் தப்பி ஓடினார்.
இதையடுத்து, அவர் மீது பல்வேறு வங்கிகள் சார்பில் தொடர்பட்ட வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டிருந்தார். எனவே, அவரைக் கைது செய்யவும் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது. மேலும், அவரது ரூ.13,900 கோடி சொத்துக்களை அமலாக்கப்பிரிவு முடக்கியுள்ளது.
இதனிடையே, லண்டனில் உள்ள விஜய மல்லையாவை இந்தியாவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவரைத் தேடப்படும் பொருளாதார குற்றவாளி என பிஎம்எல்ஏ (PMLA) நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேடப்படும் குற்றவாளி என்பவர் உள்நாட்டில் ரூ.100 கோடிக்கு மேலாகப் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுவிட்டு சட்டத்திலிருந்து தப்பிக்க வெளிநாடு செல்பவர் ஆவார். அதனடிப்படையில் தான் விஜய மல்லையா தேடப்படும் (அ) தப்பியோடிய பொருளாதார குற்றவாளி எனக் குறிப்பிடப்படுகிறார்.
மல்லையாவை தேடப்படும் பொருளாதார குற்றவாளி என அறிவிப்பதன் வாயிலாக அவரது அனைத்துச் சொத்துகளையும் பறிமுதல் செய்யும் அதிகாரம் அமலாக்கப்பிரிவுக்குக் கிடைக்கும். கர்நாடகா மட்டுமல்லாமல் லண்டனில் உள்ள அவரது சொத்துக்களைக்கூட முடக்க இயலும்.