நீலகிரி : குன்னுர் அருகே உணவு தேடி குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம், குன்னுார் சுற்று வட்டாரப்பகுதிகளில் சமீபகாலமாக கரடிகள் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. இந்நிலையில், பகல்நேரங்களில் தேயிலை தோட்டங்களிலும், இரவில் கிராமங்களிலும் உலா வரும் கரடியால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், குன்னுார் அருகே உள்ள சோகத்தொரை தேனலை கிராமத்தில் குடியிருப்பிற்குள் புகுந்த கரடி ஒன்று ஓசை எழுப்பிக் கொண்டிருந்தது. இதையடுத்து, வீட்டில் உள்ளவர்கள் வெளியே வந்து பார்க்கும் போது கரடி ஒன்று வீ்ட்டின் முன்புறம் நின்று கொண்டிருந்தது. அதனைக் கண்டு வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.
இதனிடையே, கரடி தேயிலை தோட்டத்திற்குள் சென்று விட்டது. இதனால் அச்சமடைந்த கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியே வரத் தயங்கினர். மேலும், அசம்பாவிதம் நடக்கும் முன் வனத்துறையினர் கூண்டு வைத்து கரடியை பிடிக்க வேண்டும் என கிராம மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தேயிலை தோட்டத்திற்குள் கரடி சென்றுள்ளதால், தேயிலை தொழிலாளர்கள் இன்று பணிக்கு செல்லவில்லை என்று தெரிவித்துள்ளனர்.