குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடி : பீதியில் உறைந்த கிராமவாசிகள்

நீலகிரி : குன்னுர் அருகே உணவு தேடி குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நீலகிரி : குன்னுர் அருகே உணவு தேடி குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். 

நீலகிரி மாவட்டம், குன்னுார் சுற்று வட்டாரப்பகுதிகளில் சமீபகாலமாக கரடிகள் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. இந்நிலையில், பகல்நேரங்களில் தேயிலை தோட்டங்களிலும், இரவில் கிராமங்களிலும் உலா வரும் கரடியால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். 



இந்த நிலையில், குன்னுார் அருகே உள்ள சோகத்தொ‌ரை தேனலை கிராமத்தில் குடியிருப்பிற்குள் புகுந்த கரடி ஒன்று ஓசை எழுப்பிக் கொண்டிருந்தது. இதையடுத்து, வீட்டில் உள்ளவர்கள் வெளியே வந்து பார்க்கும் போது கரடி ஒன்று வீ்ட்டின் முன்புறம் நின்று கொண்டிருந்தது. அதனைக் கண்டு வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.

இதனிடையே, கரடி தேயிலை தோட்டத்திற்குள் சென்று விட்டது. இதனால் அச்சமடைந்த கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியே வரத் தயங்கினர். மேலும், அசம்பாவிதம் நடக்கும் முன் வனத்துறையினர் கூண்டு வைத்து கரடியை பிடிக்க வேண்டும் என கிராம மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தேயிலை தோட்டத்திற்குள் கரடி சென்றுள்ளதால், தேயிலை தொழிலாளர்கள் இன்று பணிக்கு செல்லவில்லை என்று தெரிவித்துள்ளனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...