கோவையில் ஊர்க்காவல் படையினருக்கான உடற்தகுதி தேர்வு

கோவை : கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் ஊர்க்காவல் படையினருக்கான உடற்தகுதி தேர்வு நடைபெற்றது

கோவை : கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் ஊர்க்காவல் படையினருக்கான உடற்தகுதி தேர்வு நடைபெற்றது.

தமிழக போலீசாருக்கு உதவுவதற்காக, மாநகர், மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் ஊர்க்காவல் படை செயல்பட்டு வருகிறது. அதேபோல, தமிழகம் முழுவதும் ஊர்க்காவல் படை வீரர்களில் இணைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கோவை அவிநாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் ஊர்க்காவல் படையினருக்கான உடற்தகுதி தேர்வு இன்று காலை 5:30மணி முதல் 11 மணி வரை நடைபெற்றது.



இதில், கலந்து கொண்ட வீரர்களின் உயரம், எடை, மார்பகம் மற்றும் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, ரன்னிங் அடிப்படையில் தேர்வுகள் நடைபெற்றது. இந்த உடற்தகுதித் தேர்வில் மொத்தம் 73 பேர் கலந்து கொண்டனர். இதில், ஆண்கள் 43 பேரும், பெண்கள் 9 பேரும் என மொத்தம் 52 பேர் இன்று தேர்வாகியுள்ளனர். இந்த தேர்வானது ஊர்க்காவல் படை இணை அதிகாரி மற்றும் மாநகர ஆயுதப்படை உதவி ஆணையாளர் நாகராஜன் முன்னிலையில் நடைபெற்றது. 

இதில், பிரதேச தளபதி டீ.கே. தனசேகர் மற்றும் உதவி தளபதி தேன்மொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள் மற்ற தகுதிகளின் அடிப்படையில் ஊர்க்காவல் படைக்கு தேர்வு செய்யப்படவுள்ளனர். இதற்கான முடிவுகள் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...