கன்னியாகுமரி : பேருந்து ஓட்டுநரைத் தாக்க முயன்ற பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்களைத் தடியடி நடத்தாமலேயே விரட்டிய காவல்துறை அதிகாரியின் காணொளி சமூக வலைதளங்களில் வைரலானது.

சபரிமலை கோயிலில் இரண்டு பெண்கள் ஐயப்பனைத் தரிசித்ததை கண்டித்து அங்கு வன்முறை வெடித்துள்ளது. தொடர் போராட்டங்களும், முழு கடையடைப்பும் நடைபெற்று வருகிறது. இதையடுத்து, பாரதிய ஜனதா கட்சியினரும் மார்க்ஸிஸ்ட் கட்சித் தொண்டர்களும் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலைக் கட்டுக்குள் கொண்டு வர வர போலீசார் முயன்று வருகின்றனர்.
இதையடுத்து, தமிழக எல்லைப் பகுதியிலும் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், இன்று கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் கேரள அரசு பேருந்து ஒன்று வந்தது. இந்தப் பேருந்தை மறித்த பா.ஜ.க கட்சித் தொண்டர்கள் பேருந்தையும், ஓட்டுநரையும் தாக்க முயன்றனர். களியக்காவிளை போலீசார் கட்சித் தொண்டர்களைச் சமாதானப்படுத்த முயன்றனர்.
ஆனால், பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்கள் ஆத்திரத்தில் பேருந்தை அடித்து நொறுக்க முயன்றனர். இதையடுத்து, களியக்காவிளை காவல் நிலைய உதவி ஆய்வாளர் மோகன் பா.ஜ.க கட்சியினரை மிரட்டினார். எஸ்.ஐ மோகனைப் பார்த்து மிரண்டுபோன கட்சித் தொண்டர்கள் இடத்தைக் காலிச் செய்துவிட்டு ஓடிவிட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வெகுவான வரவேற்பைப் பெற்று வருகிறது.
மேலும், இந்த விவகாரத்தில் பேருந்து ஓட்டுநரைத் தாக்க முயல்வது எந்த விதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்பிய பொதுமக்கள், பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்களைத் தடியடி நடத்தாமலேயே விரட்டியடித்தற்காக எஸ்.ஐ மோகனை வெகுவாகப் பாராட்டினர்.