கோவை : ரிசர்வ் வங்கி, புத்தாண்டு பரிசாக, ரூ.25 கோடி வரையிலான, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் வாராக்கடனை மறுசீரமைக்க, வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளதை இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.
கோவை : ரிசர்வ் வங்கி, புத்தாண்டு பரிசாக, ரூ.25 கோடி வரையிலான, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் வாராக்கடனை மறுசீரமைக்க, வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளதை இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.
பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி., அமலாக்கம் ஆகியவற்றால் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதன் காரணமாக, வங்கிக் கடனை உரிய முறையில் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, வங்கிகள், தவணை செலுத்தத் தவறும் நிறுவனங்களின் கடன்களை, வாராக்கடன் பிரிவில் சேர்த்து திவால் சட்டத்தின் மூலம், கடனை வசூலிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன.
இதனால், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மூடப்படும் அபாயம் உள்ளதால், அவற்றின் வாராக்கடன்களை மறுசீரமைக்க வேண்டும் என மத்திய அரசு ரிசர்வ் வங்கியை வலியுறுத்தி வந்தது. இந்நிலையில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் வாராக்கடனை மறுசீரமைக்க வங்கிகளுக்கு உத்தரவிட்டு அறிக்கை வெளியிட்டுவிள்ளது.
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, ஜனவரி மாதம் 1 முதல் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின், ரூ.25 கோடி வரையிலான வாராக்கடன்கள் மறுசீரமைக்கப்படும். இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான கொள்கைகளை வங்கி மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் உருவாக்கி, அவற்றின் இயக்குனர் குழுவின் ஒப்புதலைப் பெற வேண்டும். மேலும், வங்கிகள் வாராக் கடனுக்காக ஏற்கனவே ஒதுக்கிய தொகையுடன், கடன் மறுசீரமைப்பிற்காகக் கூடுதலாக, 5 சதவீத தொகையை ஒதுக்க வேண்டும். எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பிற்கு, இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.