நீலகிரியில் 2019 -ம் ஆண்டின் முதல் தேயிலை ஏலம் : ரூ.3 வரை விலை உயர்வு

நீலகிரி : இணையத்தில் நடைபெற்ற 2019 ஆண்டின் முதல் தேயிலை ஏலத்தில் ரூ.2 முதல் 3 வரை விலை உயர்ந்துள்ளதால் வர்த்தகர்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நீலகிரி : இணையத்தில் நடைபெற்ற 2019 ஆண்டின் முதல் தேயிலை ஏலத்தில் ரூ.2 முதல் 3 வரை விலை உயர்ந்துள்ளதால் வர்த்தகர்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 



மலைப் பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதானமானது. இந்தத் தொழிலை ஏராளமான விவசாயிகள் நம்பியுள்ளனர். இதையடுத்து, அனைத்துத் தேயிலை தொழிற்சாலைகளிலும் உற்பத்தி செய்யப்படும் தேயிலைத்தூள், குன்னூரில் உள்ள ஏல மையம் மூலம் இணையத்தில் விற்பனை செய்யப்படுகிறது. 

இந்த ஏலம் வாரம்தோறும் நடைபெறும். ஒரு ஆண்டிற்கு சுமார் 52 வாரங்கள் நடைபெறுகிறது. இதில் உறுப்பினர்களாக உள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் கலந்துகொண்டு ஏலம் எடுக்கின்றனர். இந்த வாரம் ஆண்டின் முதல் தேயிலை ஏலம் வியாழன், வெள்ளி ஆகிய 2 நாட்கள் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான், பங்களதேஷ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வர்த்தகர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். 



இதையடுத்து, ஏலத்தில் 17 லட்சத்து 82 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வந்தது. இவை சராசரியாக ரூ.2 முதல் ரூ.3 வரை விலை அதிகரித்துக் காணப்பட்டது. பனியின் தாக்கம் அதிகரிப்பால், தேயிலை மகசூல் குறைந்துள்ளது. எனவே, இந்த விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது என வர்த்தகர்கள் கூறியுள்ளனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...