திண்டுக்கல் : பழனி மலைக்கோயிலில் 15 அடி நீளமுடைய மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்ததால், பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் முருகன் கோவிலில் தற்போது சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மற்றும் தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் என ஆயிரக்கணக்கானோர் வந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில், மலைக்கோவிலுக்கு சரக்குகள் ஏற்றிச்செல்லும் மெட்டீரியல் ரோப்கார் நிலையத்தில் மலைப்பாம்பு ஒன்று இருப்பதைக் கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், சுமார் ஒரு மணிநேரம் போராடி மலைப்பாம்பை பிடித்தனர். பிடிபட்ட மலைப்பாம்பு 15 அடி நீளமும், 150 கிலோ எடையும் இருந்தது. பின்னர், பிடிக்கப்பட்ட மலைப்பாம்பை வனத்துறையினர் வசம் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து, கொடைக்கானல் வனச்சரகத்தில் அடர்ந்த வனப்பகுதியில் மலைப்பாம்பை வனத்துறை அதிகாரிகள் கொண்டு சென்று விட்டனர்.