அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி : நடவடிக்கை கோரி கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார்

கோவை : அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தனியார் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் புகார் அளித்தார்.

கோவை : அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தனியார் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் புகார் அளித்தார். 

கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (38). இவர், கோவையில் கடந்த 2015-ம் ஆண்டு கலைவாணி இஞ்சினியரிங் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினார். அப்போது கோவைபுதூரை சேர்ந்த ஹரிநாராயணன் என்ற மாணவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஹரிநாராயணன் தனது தந்தை ராதாகிருஷ்ணனுக்கு அரசியலில் மேலிடத்தில் நல்ல செல்வாக்கு உள்ளதாகக் கூறி அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார். 



பொதுப்பணித் துறையில் அரசுப் பணி பெற்றுத் தருவதாகவும், அதற்கு ரூ. 4 லட்சம் செலவாகும் என்று கூறியுள்ளார். பணத்தை கொடுத்தவுடன் உடனடியாக வேலை கிடைக்குமென மாணவனின் தந்தை ராதாகிருஷ்ணன் கூறியதையடுத்து, ரூ. 4 லட்சம் கொடுத்துள்ளார். பணம் கொடுத்து 3 ஆண்டுகளாகியும் பணியையோ அல்லது பணத்தையோ கொடுக்காமல் காலதாமதப்படுத்தி வந்துள்ளார். இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பேராசிரியர் பிரகாஷ், இன்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...