நீலகிரி : கோத்தகிரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார், மரத்தில் மோதி கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த பெலிக்ஸ் மற்றும் அவரது நண்பர் குமார் ஆகியோர் குன்னூர் சென்றுவிட்டு, அங்கிருந்து மீண்டும் கோத்தகிரிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, ஒரசோலை அருகே வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி அருகில் உள்ள சாலையில் கவிழ்ந்து உள்ளது. இந்த விபத்தில் காரை ஓட்டிய பெலிக்ஸ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேலும், பலத்த காயமடைந்த குமாரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.