திருப்பூர் : பிளாஸ்டிக் தடை ஒருதலைபட்சமானது எனக் கூறி பிஸ்கட், குளிர்பானம், சோப், பேஸ்ட் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்களை தீ வைத்து எரித்து மாநில தலைவர் த.வெள்ளையன் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர் குமரன் சிலை அருகே சில்லறை வர்த்தகத்தில் அந்நிய ஆதிக்கத்தையும், ஆட்சியாளர்களின் சூழ்ச்சியையும் முறியடிக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் நடைபெற்றது. இதில் வணிகர்கள் ஒன்றிணைந்து குளிர்பானம், பிங்கோ, பேஸ்ட், சோப், பிஸ்கெட் உள்ளிட்ட பொருட்களை சாலையில் கொட்டி தீ வைத்து எரித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த மாநில தலைவர் த.வெள்ளையன் பேசுகையில், "மறு சுழற்சி செய்ய முடியாத பன்னாட்டு நிறுவனங்களின் பேக்கிங் கவிர்களை தடை செய்யவில்லை. ஆனால், மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை ஒருதலை பட்சமானது.
இதனால் சில்லறை வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. எனவே, பன்னாட்டு நிறுவனங்களின் சோப்பு, பற்பசை உள்ளிட்ட பொருட்களின் விற்பனையைப் புறக்கணிக்க உள்ளோம். அதற்காகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறோம்," என்றார்.