கோவை நூற்பாலையில் திடீர் தீ விபத்து : பல லட்சம் மதிப்புள்ள பஞ்சு எரிந்து நாசம்

கோவை : எஸ்.ஐ.எச்.எஸ் காலனியில் அமைந்துள்ள நூற்பாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பல லட்சம் மதிப்புள்ள பஞ்சுகள் தீயில் கருகி நாசம் அடைந்துள்ளது.

கோவை : எஸ்.ஐ.எச்.எஸ் காலனியில் அமைந்துள்ள நூற்பாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பல லட்சம் மதிப்புள்ள பஞ்சுகள் தீயில் கருகி நாசம் அடைந்துள்ளது.

கோவை மாவட்டம், எஸ்.ஐ.எச்.எஸ் காலனியில் பாலகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான நூற்பாலை உள்ளது. இந்த நூற்பாலை வளாகத்தின் ஒரு பகுதியில் நூல் உற்பத்திக்காகப் பஞ்சு பேல்கள் மற்றும் மூட்டைகளில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று மதியம் இந்தப் பஞ்சு பேல்கள் மற்றும் மூட்டைகளில் திடீரென தீப்பிடித்தது. 



இதையடுத்து, அங்கிருந்த ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால், தீ வேகமாகப் பரவியதால் அணைக்க முடியவில்லை. ஆகையால், தீ விபத்து குறித்து கோவை பீளமேடு தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. கோவை மாவட்ட தீயணைப்பு அலுவலர் பாலசுப்பிரமணியன் உத்தரவின் பேரில், நிலைய அலுவலர் முத்துகுமாரசாமி தலைமையிலான பீளமேடு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 

மேலும், சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு படையினர், பஞ்சு பேல்கள், மூட்டைகளில் பிடித்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 3 மணி நேரப் போராட்டத்திற்கு பின், பஞ்சு பேல்கள் மற்றும் மூட்டைகளில் பிடித்த தீ அணைக்கப்பட்டது. 

திடீரென ஏற்பட்ட இவ்விபத்தால், அங்கு வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான 20 பஞ்சு மூட்டைகள், 70 -க்கும் மேற்பட்ட பஞ்சு பேல்கள் எரிந்து சேதமடைந்தன. மேலும், இந்த விபத்துக் குறித்து சிங்காநல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...