உதகையில் ரூ.94 லட்சம் மதிப்பில் அன்றாட கழிவுகளை நுண் உரமாக மாற்றும் செயலாக்க மையங்கள் திறப்பு

நீலகிரி : உதகை, காந்தல் பகுதியில் ரூ.94 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இரண்டு நுண் உரம் செயலாக்க மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா திறந்து வைத்தார்.

நீலகிரி : உதகை, காந்தல் பகுதியில் ரூ.94 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இரண்டு நுண் உரம் செயலாக்க மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா திறந்து வைத்தார். 



தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் உதகை நகராட்சி பகுதியில் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் ஒருபகுதியாக அன்றாட சேகரிக்கும் கழிவுகளை நுண் உரமாக மாற்றும் செயலாக்க மையங்கள், 6 இடங்களில் ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டது. இதில் முதலாவதாக உதகை காந்தல் பகுதியில் ரூ.94 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 2 நுண் உரம் செயலாக்க மையங்கள் இன்று தொடங்கப்பட்டது. 



நீலகிரி இயற்கை வேளாண் மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்த மையங்கள் மூலம் தயாரிக்கப்படும் இயற்கை உரங்கள் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படவுள்ளது. அன்றாடம் சேகரிக்கப்படும் கழிவுகள் மூலம் 4 டன் உரம் தினசரி உற்பத்தி செய்யப்படும் என்று தெரிகிறது. தற்போது நீலகிரி மாவட்டத்தில் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டு, விற்பனையாளர்களிடம் வெற்றிகரமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 

இது பற்றி மாவட்ட ஆட்சியர் கூறும் போது, தமிழகத்தில் 1 -ம் தேதி முதல் பிளாஸ்டிக் தடை செய்யப்படவுள்ள நிலையில், அதற்கு நீலகிரி மாவட்டம் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். இந்நிழ்சியில் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர். அர்ஜூணன், குன்னூர் சட்டப்பேரவை உறுப்பினர் சாந்தி ராமு, உதகை சட்டப்பேரவை உறுப்பினர் கணேசன்,உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 



Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...