உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைப்பதைக் கண்டித்து இந்திய தொழிற்சங்க மையத்தினர் ஆர்பாட்டம்

கோவை : விளைநிலங்கள் மீது உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், அவர்களுக்கு ஆதரவளித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவகத்தின் முன்பு இந்திய தொழிற்சங்க மையத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை : விளைநிலங்கள் மீது உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், அவர்களுக்கு ஆதரவளித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவகத்தின் முன்பு இந்திய தொழிற்சங்க மையத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 



தமிழக அரசு, மின்வாரியம் சார்பில் உயர்மின் அழுத்த கோபுரங்களை விளைநிலங்கள் வழியாக கொண்டு செல்ல திட்டமிட்டு உள்ளது. இதனைக் கண்டித்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக இந்திய தொழிற்சங்க மையத்தினர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, ஆர்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் விவசாயிகளை வஞ்சிக்காதே, விளை நிலங்களை பாலைவனம் ஆக்காதே, மாற்று வழிதடத்தில் உயர்மின் கோபுரங்களை அமைத்திடு, விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்காதே உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதன் பின்னர் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், "தமிழக அரசு விவசாயிகளின் விருப்பதிற்கு மாறாக உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைவதை கைவிட வேண்டும். அதற்கு மாற்றாக கேரள மாநிலத்தை போல் பூமிக்கு அடியில் அமைக்க முயற்சிக்க வேண்டும். 

மேலும், சுல்தான்பேட்டை முதல் சேலம் வரை உள்ள ஏழு மாவட்ட விவசாயிகள் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களது கோரிக்கையை அரசு பரிசீலனை செய்ய வேண்டும். மேலும், மாற்றம் ஒன்றே ஒரே வழி என்பதை வலியுறுத்தி வரும் 8,9 ஆகிய தேதிகளில் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம்," என்றார். இதனைத் தொடர்ந்து ஆர்பாட்டக்காரர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...