திருப்பூர் : அரசின் புதிய அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்ய உடனடியாக பணம் செலுத்தக் கோரி கெடுபிடி செய்வதாக குடிசைமாற்று வாரிய அதிகாரிகள் மீது புகார் தெரிவித்து கண்களில் கருப்பு துணி கட்டி, பட்டை நாமத்துடன் பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 34 -வது வார்டு பகுதியில் அமைந்துள்ளது மேட்டுவளவு பகுதி. இங்கு கடந்த 100 வருடங்களாக 50 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இதனிடையே, சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற உள்ளக் காரணத்தால், அப்பகுதியில் குடி இருந்தவர்களுக்கு மாற்று இடத்துடன் கூடிய வீடு இலவசமாக ஒதுக்கித் தருவதாக கூறி குடிசைப்பகுதி மாற்று வாரிய அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
இதனையடுத்து, திருப்பூர் வீரபாண்டி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் அனைவருக்கும் வீடு ஒதுக்கீடு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அதற்கான ஒதுக்கீடு ரசீதும் வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது வீடு ஒதுக்கீடு பெற்ற அனைவரும் தலா ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் கட்டணமாக செலுத்த நோட்டீஸ் அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் கூலி வேலை செய்துவரும் தங்களால் பெரிய தொகையைச் செலுத்த இயலாது எனக் கூறி அதிகாரிகள் மீது புகார் கூறினர்.
மேலும், தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதமாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தரையில் அமர்ந்து கண்களில் கருப்பு துணியை கட்டியும், பட்டை நாமம் இட்டும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.