புத்தாண்டைக் கொண்டாட வந்த இளைஞர்களின் கார் நிலைதடுமாறியது : ஒருவர் பலி

திண்டுக்கல் : பழனி அருகே மலைப்பாதையில் சென்ற சுற்றுலா வாகனம்‌ பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில், சம்பவ இடத்திலே ஒருவர் பலி மற்றும் ஆறு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் : பழனி அருகே மலைப்பாதையில் சென்ற சுற்றுலா வாகனம்‌ பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில், சம்பவ இடத்திலே ஒருவர் பலி மற்றும் ஆறு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.



நேற்று புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு கேரளா மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்த ஏழு இளைஞர்கள்‌ கொடைக்கானலிற்குச் சுற்றுலா சென்றனர். வாகனத்தை ஜூபின் என்ற இளைஞர் ஓட்டி வந்துள்ளார். 

இதையடுத்து, இன்று அதிகாலை பழனியில் இருந்து கொடைக்கானல் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த போது, ஏழாவது கொண்டை ஊசிவளைவு அருகே சவரிக்காடு பகுதியில் சுற்றுலா வாகனம் நிலை தடுமாறியுள்ளது. 

அதையடுத்து, ஆயிரம் அடி பள்ளத்தில் வாகனம் உருண்டு விழுந்தது. இந்த விபத்தில் திருச்சூர் அமலாஹவுஸ் என்ற பகுதியை சேர்ந்த விஷ்ணு (19), சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்த சச்சின், அப்துல், ஆண்டனி, அனீஸ், டிஷ்ணு, ஜூபீன் ஆகிய ஆறு பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் விபத்தில் சிக்கியவர்களை கயிறு கட்டி மீட்டு வருகின்றனர். 



இதனிடையே, சம்பவ இடத்திற்குக் கொடைக்கானல் டிஎஸ்பி பொன்னுசாமி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து கொடைக்கானல் டி.எஸ்.பி தெரிவித்ததாவது :- பழனியில் இருந்து கொடைக்கானல் சாலையில் இருசக்கரவாகனம்‌ மற்றும் காரில்வரும் சுற்றுலாப் பயணிகள் மிகவும் கவனத்துடன் வரவேண்டும். ஓட்டுநருக்கு தூக்கம் வந்தால் அவரை சிறிதுநேரம் ஓய்வு எடுக்கச் சொல்லி பிறகு வாகனத்தை இயக்க அறிவுறுத்தினர்.



குறிப்பாக, இரவு நேரங்களில் மலைப்பாதை பயணத்தை குறைத்து சென்றால் பெரும் விபத்துகள் தவிர்க்கப்படும். புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வரும் இளைஞர்கள் தங்களது பொறுப்புகளை உணர்ந்து குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்‌, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...