திண்டுக்கல் : பழனி அருகே மலைப்பாதையில் சென்ற சுற்றுலா வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில், சம்பவ இடத்திலே ஒருவர் பலி மற்றும் ஆறு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

நேற்று புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு கேரளா மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்த ஏழு இளைஞர்கள் கொடைக்கானலிற்குச் சுற்றுலா சென்றனர். வாகனத்தை ஜூபின் என்ற இளைஞர் ஓட்டி வந்துள்ளார்.
இதையடுத்து, இன்று அதிகாலை பழனியில் இருந்து கொடைக்கானல் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த போது, ஏழாவது கொண்டை ஊசிவளைவு அருகே சவரிக்காடு பகுதியில் சுற்றுலா வாகனம் நிலை தடுமாறியுள்ளது.
அதையடுத்து, ஆயிரம் அடி பள்ளத்தில் வாகனம் உருண்டு விழுந்தது. இந்த விபத்தில் திருச்சூர் அமலாஹவுஸ் என்ற பகுதியை சேர்ந்த விஷ்ணு (19), சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்த சச்சின், அப்துல், ஆண்டனி, அனீஸ், டிஷ்ணு, ஜூபீன் ஆகிய ஆறு பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் விபத்தில் சிக்கியவர்களை கயிறு கட்டி மீட்டு வருகின்றனர்.

இதனிடையே, சம்பவ இடத்திற்குக் கொடைக்கானல் டிஎஸ்பி பொன்னுசாமி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து கொடைக்கானல் டி.எஸ்.பி தெரிவித்ததாவது :- பழனியில் இருந்து கொடைக்கானல் சாலையில் இருசக்கரவாகனம் மற்றும் காரில்வரும் சுற்றுலாப் பயணிகள் மிகவும் கவனத்துடன் வரவேண்டும். ஓட்டுநருக்கு தூக்கம் வந்தால் அவரை சிறிதுநேரம் ஓய்வு எடுக்கச் சொல்லி பிறகு வாகனத்தை இயக்க அறிவுறுத்தினர்.

குறிப்பாக, இரவு நேரங்களில் மலைப்பாதை பயணத்தை குறைத்து சென்றால் பெரும் விபத்துகள் தவிர்க்கப்படும். புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வரும் இளைஞர்கள் தங்களது பொறுப்புகளை உணர்ந்து குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவதை தவிர்க்க வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.