கோவை மத்திய சிறையில் மத்திய சரக உதவி ஆணையர் திடீர் ஆய்வு : கூர்மையான பொருட்கள் பறிமுதல்

கோவை : கோவை மத்திய சிறையில் மாநகர மத்திய சரக உதவி ஆணையாளர் தலைமையில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், கூர்மையானப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கோவை : கோவை மத்திய சிறையில் மாநகர மத்திய சரக உதவி ஆணையாளர் தலைமையில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், கூர்மையானப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.



கோவை மத்திய சிறையில் மாநகர காவல் உதவி ஆணையாளர் சுந்தரராஜன் தலைமையில் ஆய்வாளர், மாநகர போலீஸார் மற்றும் சிறை போலீஸார் என 50-க்கும் மேற்பட்டோர் திடீர் சோதனை நடத்தினர். மாலை சுமார் 4.30 மணி முதல் 7 மணி வரை இந்த சோதனை நடந்தது. இந்த சோதனையானது, சிறை வளாகம் மைதானம் சிறையில் உள்ள அறை என அனைத்துப் பகுதியிலும் நடைபெற்றது. 

அதேபோல, சந்தேகத்திற்கிடமான சிறை கைதிகளிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதில், மாநகர வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சிறைவாசிகளில் சிலர் உணவு சாப்பிடும் தட்டை, கத்தி போல் கூர்மையாக்கி பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து, ஆபத்தை ஏற்படுத்தும் கூர்மையான பொருட்களை சோதனையில் ஈடுபட்ட போலீசார் கைப்பற்றினர். மேலும், இந்த கூர்மையான பொருட்கள் எதற்காக பதுக்கி வைக்கப்பட்டது என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தினர். 

கோவை மத்திய சிறை வளாகத்தில் திடீரென காவல்துறையினர் நடத்திய சோதனை பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...