கூடலூர் அருகே அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி மீன்பிடித்த கேரளாவைச் சேர்ந்த 4 பேர் கைது

நீலகிரி : கூடலூர் அருகே பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் இரவு நேரத்தில் தங்கி மீன் பிடித்த கேரளாவைச் சேர்ந்த 4 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.

நீலகிரி : கூடலூர் அருகே பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் இரவு நேரத்தில் தங்கி மீன் பிடித்த கேரளாவைச் சேர்ந்த 4 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். 

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட தர்மகிரி பகுதியில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் கடந்த 27-ம் தேதி சிலர் இரவுநேரம் தங்கி மீன் பிடிப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், வனத்துறையினர் நேற்று முன்தினம் அதிகாலையில் தர்மகிரி வனப்பகுதியில் ரோந்து மேற்கொண்டனர். அப்போது, வனப்பகுதிக்குள் இருந்து 4 பேர் வருவதைக் கண்ட வனத்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.



விசாரணையில், அவர்கள் நான்கு பேரும் கேரளா மாநிலம், மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த யாகோப், சாகுல், முகமது நசீப், சாகுல் ஆகிய நான்கு பேரும் இங்குள்ள உறவினர் வீட்டிற்கு வந்த நிலையில், ஆற்றில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். அவர்கள் மீது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் கோத்தகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் இருந்து மீன்பிடி வலை, டார்ச் விளக்குகள் மற்றும் மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...