கோவை : கோவை ரயில்நிலையம் சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள ரவுண்டானாவில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களால் பேருந்துகள் திரும்ப முடியாமல் தவிக்கின்றன.

கோவை ரயில்நிலையத்தில் இருந்து கிளம்பும் பேருந்துகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள ரவுண்டாவில் திரும்பி கோவை அரசு மருத்துவமனை பேருந்து நிலையங்களுக்கு செல்கின்றன. அதன்பின் அங்கிருந்து உக்கடம், டவுன்ஹால், பூமார்க்கெட், சாய்பாபா காலனி, புதிய பேருந்து நிலையம், துடியலூர், பிரஸ்காலனி ஆகிய பகுதிகளுக்கு செல்கின்றன.

இதனிடையே. அச்சாலையில் முறையற்ற பார்க்கிங் காரணமாக பேருந்துகள் திரும்ப முடியாமல் தவிக்கின்றன. அதே சமயம், மற்ற வாகனங்களும் அச்சாலையில் செல்லும் போது போக்குவரத்து நெரிசலுக்கு ஆளாகின்றன. இதனால், பயணிகளின், நடைபாதையில் செல்லும் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். பார்க்கிங் வசதியை மேம்படுத்தி பேருந்துகள் திரும்பவும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.