நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் பெய்த சாரல் மழையும், கடுமையான குளிரின் காரணமாக, அங்குள்ள சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் குறைந்தே காணப்படுகிறது.
நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் பெய்த சாரல் மழையும், கடுமையான குளிரின் காரணமாக, அங்குள்ள சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் குறைந்தே காணப்படுகிறது.

உதகை, குன்னூர், கோத்தகிரி போன்ற பகுதிகளில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்று காலை முதல் அடர்ந்த மேக மூட்டம் காணப்படுவதுடன், சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்யும் சாரல் மழை காரணமாக குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. கடும் குளிரை சுற்றுலாப் பயணிகள் ரசித்து அனுபவித்தாலும், மேகமூட்டத்தால் இயற்கை காட்சிகளை காணமுடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

கடும் குளிரும் நிலவி வருவதால் தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா, கோடநாடு, லேம்ஸ்ராக், டால்பினோஸ் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் விடுமுறை நாட்கள் என்றாலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்தே காணப்பட்டது. சுற்றுலா வந்தவர்களில் பலரும் காலை சில மணி நேரம் விடுதிகளிலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுலாத் தொழிலை நம்பியிருந்த வியாபாரிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டனர்.