நீலகிரி : குன்னூர் ஐயப்ப சுவாமி திருக்கோயிலின் 52-வது மண்டல பூஜையையொட்டி, பெண்கள், குழந்தைகள் என ஏராளமான பக்தர்கள் விளக்கு ஏந்தி ஊர்வலமாகச் சென்று ஐயப்பனை வழிபட்டனர்.

குன்னூர் ஐயப்பன் கோவிலில் 52-வது ஆண்டு மண்டல பூஜை திருவிழா, அதிகாலை 5 மணிக்கு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. ஐயப்பனுக்கு அபிஷேகம், அலங்கார சிறப்பு பூஜை, உஷ பூஜை நடந்தது. திருவிளக்கு பூஜையை கோவில் ஸ்தாபகர் சங்கர் சுவாமி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். அதில், பகவதி அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. உச்சிகால பூஜையை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

காலை விநாயகர் கோவிலில் இருந்து அபிஷேகப் பொருட்களுடன், தீர்த்தகுட ஊர்வலம் நடந்தது. பின்னர், ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 3 மணிக்கு திருவீதி உலா ஐயப்பன் கோவிலில் இருந்து தொடங்கி, குன்னுார், ஊட்டி சாலை, டி.டி.கே சாலை, வி.பி.தெரு, மார்க்கெட்டி பகுதி, மவுண்ட் ரோடு, பெட்போர்டு வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. ஊர்வலத்தில் செண்டை மேளம் முழங்க பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஏராளமான பக்தர்கள் விளக்குகளை ஏந்தியவாறு கலந்து கொண்டனர்.
புலி வாகனத்தில் ஐயப்பன் பவனி மற்றும் எர்ணாகுளம் சிந்து பாட்டு குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும், காளி, அனுமான், சிவன், அன்னலட்சுமி ஆகிய கடவுள்களைப் போல வேடமணிந்து நடனமாடினர். இதில், ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கலந்து கொண்டனர்.