கோவை : கோவையில் மாநகர காவல் ஆணையாளர் தலைமையில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்ட சமயத்தில் மது போதையில் வரும் வாகன ஓட்டிகளைப் பிடிக்க 22 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

ஆங்கில புத்தாண்டு பண்டிகை வரும் செவ்வாய்கிழைமை கொண்டாடப்பட உள்ளது. இந்த கொண்டாட்ட நிகழ்வுகளின் போது, அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் தலைமையில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பணிகளில் துணை ஆணையர்கள் பாலாஜி சரவணன், பெருமாள், சுஜித்குமார் ஆகியோர் மேற்பார்வையில் வரும் 31 -ம் தேதி இரவு முதல் மறுநாள் அதிகாலை 6 மணி வரை மாநகரில் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
இதையடுத்து, பாதுகாப்பு நடவடிக்கைகளில் 200 ஆயுதப்படை போலீசார் மற்றும் 150 ஊர்காவல் படையினரும் ஈடுபடுகின்றனர். வடகோவை, அவினாசி சாலை, நஞ்சப்பா சாலை ஆகிய இடங்களில் உள்ள மேம்பாலங்களில் வாகன போக்குவரத்து 31 -ம் தேதி இரவு தடை செய்யப்படும். கொடிசியா, பார்க் கேட் சிக்னல், ரேஸ்கோர்ஸ், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட 9 இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
மேலும், கோவை மாநகரில் உள்ள 62 கிறிஸ்துவ தேவாலயங்கள், 30 நட்சத்திர ஓட்டல்கள் அருகே போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது. முக்கிய இடங்களில் தீயணைப்பு வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனம் தயார் நிலையில் நிறுத்தப்படும். குறிப்பாக மது போதையில் வாகனம் ஓட்டி வருபவர்களைப் பிடிக்க 22 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தனிப்படையினர், மதுபோதையில் வாகனம் ஓட்டி வருபவர்களைப் பிடித்து அறிவுரை கூறி, போதை தெளிந்தவுடன் அனுப்பி வைப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.