உணவு வணிகர்கள் பதிவு கட்டணத்தை செலுத்த டிச.,31-ம் தேதி கடைநாள்

கோவை : உணவு வணிகர்கள் செலான் மூலம் பதிவு கட்டணத் தொகையை செலுத்துவதற்கான காலக்கெடு வரும் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது.

கோவை : உணவு வணிகர்கள் செலான் மூலம் பதிவு கட்டணத் தொகையை செலுத்துவதற்கான காலக்கெடு வரும் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. 

இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- உணவு வணிகர்கள் மேற்கொள்ளும் உணவு வணிகத்திற்கு உரிமம் மற்றும் பதிவு மேற்கொள்ள அரசுக்கு செலுத்தப்படும் கட்டணத் தொகையானது கருவூல முத்திரையுடன் கூடிய வங்கி செலான் மூலம் கட்டணத் தொகை செலுத்தப்பட்டு வந்தது. ஆனால், வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் அனைவரும் இ-பேமெண்ட் ஆன்டிலைன் மூலமாகவே கட்டணம் செலுத்தி புதியதாக உரிமம் பெறுவது மற்றும் பதிவு செய்து கொள்ள வேண்டும். 

மேலும், அனைத்து உணவு வணிகம் செய்யும் வணிகர்கள் அனைவரும் உரிமத்தைப் புதுப்பிக்க ஆன்லைன் முறையில் தான் கட்டணத் தொகை செலுத்த முடியும். இத்தொகையை கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங் போன்ற முறையில் ஆன்லைன் மூலமான செலுத்தினால் போதுமானது. 

கருவூல முத்திரையுடன் கூடிய வங்கி செலான் மூலம் கட்டணம் செலுத்தும் முறை அனுமதிக்கப்படமாட்டாது. ஆகையால், செலான் ஏற்றுக் கொள்ள இயலாது. எனவே, அனைத்து உணவு வணிகர்களும் வரும் 20-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். 

இது குறித்து ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அலுவலகம் அல்லது நியமன அலுவலகர் அலுவலகத்தை/ உணவு பாதுகாப்பு பிரிவு பந்தய சாலை கோவை என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...