கோவையில் தங்க நகைகள் செய்யும் தொழிலாளியின் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை : 45 சவரன் தங்க நகை மாயம்

கோவை : சாமிஐயர் புது வீதி அருகே தங்க நகை தொழிலாளியின் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 45 சவரன் தங்க நகை திருடப்பட்டுள்ள சம்பவம் குறித்து பெரிய கடை வீதி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை : சாமிஐயர் புது வீதி அருகே தங்க நகை தொழிலாளியின் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 45 சவரன் தங்க நகை திருடப்பட்டுள்ள சம்பவம் குறித்து பெரிய கடை வீதி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவையில் அமைந்துள்ள சாமி ஐயர் புது வீதி பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவர் தங்க பட்டறை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்றிரவு தனது குடும்பத்தினருடன் அருகிலுள்ள பூங்காவிற்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது அவரது வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். 



இதையடுத்து, வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த நகை உட்பட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இந்தச் சம்பவத்தை அடுத்து கணேசன் உடனடியாக பெரியகடைவீதி காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். 



இதற்கிடையில், வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 45 சவரன் தங்க நகை திருட்டு போய் இருப்பதாக தங்கநகை தொழிலாளி கணேசன் தெரிவித்தார். இது தொடர்பாக பெரியகடைவீதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கக்கூடிய வீதியில், மாலை நேரத்தில் நடந்த இத்திருட்டு சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...