நீலகிரி : தொடர் விடுமுறை காரணமாக நீலகிரி மலைரயிலில் பயணிக்க சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் ஆர்வம் காட்டுவதால், குன்னுார் ரயில் நிலையத்தில் ரயில்வே ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்,
நீலகிரி : தொடர் விடுமுறை காரணமாக நீலகிரி மலைரயிலில் பயணிக்க சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் ஆர்வம் காட்டுவதால், குன்னுார் ரயில் நிலையத்தில் ரயில்வே ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

நீலகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் அம்சங்களில் உதகை மலைரயில் முக்கிய இடம் பெறுகிறது. ஆசியாவிலேயே உதகை மலைரயில் தான், பல்சக்கர தண்டவாளத்தைக் கொண்டது என்பதாலும், பயணத்தின் போது இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க முடியும் என்பது உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களால், இந்த ரயிலுக்கு யுனெஸ்கோ நிறுவனம் பாரம்பரிய அந்தஸ்து வழங்கியது.
தற்போது, அரையாண்டு விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் மலைரயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். இந்த நிலையில், ரயில்வே ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு குன்னுார் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது :- மலைரயிலில் ஜி.ஆர்.பி. செயலியை அறிமுகம் செய்து சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ரயில்வே காவல்துறை பணிகள் மேற்கொள்ள வேண்டும். திருட்டு நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுப்பதோடு, ரயில்வே எல்ப், செயலி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி திருட்டு போனால், புகார் அளிக்க பயணிகளுக்கு உதவ வேண்டும். பெண்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால், ரயிலில் உள்ள துப்பாக்கி ஏந்திய காவலர்கள் உதவி செய்வார்கள். ரயில் பயணம் முடித்து வீட்டிற்கு சென்ற பிறகும் இந்த செயலி மூலம் புகார் அளிக்கலாம், என்றார்.