மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் : மின்சார பணிகள் பாதிக்கும் அபாயம்

கோவை : 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் கோவை மண்டலமும் ஈடுபட்டுள்ளதால், மின் பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கோவை : 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் கோவை மண்டலமும் ஈடுபட்டுள்ளதால், மின் பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க கோவை மண்டல கூட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. கோவை மண்டல செயலாளர் நாகராஜ் தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் மண்டலம் முழுவதும் இருந்து ஏராளமான மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் பங்கேற்றனர். 



ஒப்பந்த ஊழியர்களுக்கு ரூ. 350 ஊதியம், பணி அடையாள அட்டை, பணி பாதுகாப்பு உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை கடந்த ஓராண்டாக மின்வாரிய அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றும், அதனை அமைச்சர் கண்டு கொள்ளவில்லை என ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். கஜா புயல் ஏற்பட்டபோது துண்டித்த மின் இணைப்புகளை துரிதமாக வழங்க மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் 8,000-க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்ட நிலையில், சிறப்பாகப் பணிகளை முடித்த தங்களது கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றும் என மின்துறை அமைச்சர் தெரிவித்தார். அதனை இம்மாதம் 24-ம் தேதி அமைச்சரவையில் முடிவு எடுக்கப்படும் என கூறினார். 

ஆனால், தங்களது கோரிக்கையை அரசு ஏற்று எவ்வித அறிவிப்பும் வெளியிடாமல் ஏமாற்றிவிட்டதாக அவர்கள் குற்றம்சாட்டினர். மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் கடந்த இரண்டு நாட்களாக தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கியுள்ளது. இன்று முதல் கோவை மண்டல மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் இதில் பங்கேற்பதாகவும் அறிவித்துள்ளனர். மின்சார வாரியத்தில் 70 சதவீத பணிகள் ஒப்பந்த ஊழியர்களைக் கொண்டே நடைபெற்று வந்த நிலையில், ஊழியர்களின் இந்த வேலைநிறுத்தத்தால் கோவை மண்டல மின் பணிகள் முற்றிலும் முடங்கும் நிலை உருவாகி உள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...