கோவை : கோவை அரசு மருத்துவமனையில் உள்ள கண் சிகிச்சை வார்டில் சங்கிலிகளால் கட்டப்பட்ட மர்ம பெட்டி கிடந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை அரசு மருத்துவமனையில் உள்ள கண் சிகிச்சை வார்டில் இன்று காலை ஒரு மர்ம பெட்டி இருந்தது. இந்த பெட்டி இரும்பு சங்கிலியால் கட்டப்பட்டு இருந்தது. இதை கண்ட மருத்துவமனை ஊழியர்கள், வெடிகுண்டு பெட்டி என கருதி, மருத்துவமனையில் உள்ள நோயாளிகளை அவசர அவசரமாக வெளியேற்றினர். இதைத் தொடர்ந்து தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மர்ம பெட்டியை சோதனை செய்தனர். சோதனையில், அந்தப் பெட்டியில் துணி மற்றும் மருந்துப் பொருட்கள் மட்டுமே இருப்பது தெரியவந்தது.

மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்ததில், இந்த மர்ம பெட்டி கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த ஆண்ட்ரோஸ் என்பவருடையது என்பதும், மேலும் இவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வந்ததும் தெரியவந்தது. நோயாளியான ஆண்ட்ரோஸ் வேறு வார்டில் உள்ள மருத்துவரைப் பார்த்துவிட்டு, மீண்டும் கண் சிகிச்சை வார்டுக்கு வருவதற்குள் இவ்வளவு இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த நோயாளியின் துணிப் பெட்டியை, வெடிகுண்டு பெட்டி என ஏற்படுத்திய வதந்தியால் மருத்துவமனைக்குள் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.