கோவை அரசு மருத்துவமனையில் கிடந்த மர்ம பெட்டி : வெடிகுண்டு பீதியில் நோயாளிகள் வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு

கோவை : கோவை அரசு மருத்துவமனையில் உள்ள கண் சிகிச்சை வார்டில் சங்கிலிகளால் கட்டப்பட்ட மர்ம பெட்டி கிடந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை : கோவை அரசு மருத்துவமனையில் உள்ள கண் சிகிச்சை வார்டில் சங்கிலிகளால் கட்டப்பட்ட மர்ம பெட்டி கிடந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

கோவை அரசு மருத்துவமனையில் உள்ள கண் சிகிச்சை வார்டில் இன்று காலை ஒரு மர்ம பெட்டி இருந்தது. இந்த பெட்டி இரும்பு சங்கிலியால் கட்டப்பட்டு இருந்தது. இதை கண்ட மருத்துவமனை ஊழியர்கள், வெடிகுண்டு பெட்டி என கருதி, மருத்துவமனையில் உள்ள நோயாளிகளை அவசர அவசரமாக வெளியேற்றினர். இதைத் தொடர்ந்து தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மர்ம பெட்டியை சோதனை செய்தனர். சோதனையில், அந்தப் பெட்டியில் துணி மற்றும் மருந்துப் பொருட்கள் மட்டுமே இருப்பது தெரியவந்தது. 



மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்ததில், இந்த மர்ம பெட்டி கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த ஆண்ட்ரோஸ் என்பவருடையது என்பதும், மேலும் இவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வந்ததும் தெரியவந்தது. நோயாளியான ஆண்ட்ரோஸ் வேறு வார்டில் உள்ள மருத்துவரைப் பார்த்துவிட்டு, மீண்டும் கண் சிகிச்சை வார்டுக்கு வருவதற்குள் இவ்வளவு இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 

கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த நோயாளியின் துணிப் பெட்டியை, வெடிகுண்டு பெட்டி என ஏற்படுத்திய வதந்தியால் மருத்துவமனைக்குள் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...