உதகையில் களைகட்டிய கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் : வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பாடல்கள் பாடி உற்சாகம்

நீலகிரி : உதகையில் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கிறிஸ்துமஸ் ஆராதனை பாடல்கள் பாடி இயேசு பிறப்பை கொண்டாடினர்.

நீலகிரி : உதகையில் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கிறிஸ்துமஸ் ஆராதனை பாடல்கள் பாடி இயேசு பிறப்பை கொண்டாடினர்.

நீலகிரி மாவட்டம் சுற்றுலா மாவட்டமாக திகழ்ந்து வருவதால் இம்மாவட்டத்திற்கு அதிகளவு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். குறிப்பாக, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சமயங்களில் வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க உதகையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில்  கிறிஸ்துமஸ் ஈவ் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், இயேசு பிறப்பின் நிகழ்வுகளையும், அவர் பிறப்பின் முக்கியத்துவம் குறித்தும் பாடல்கள் மூலமாக, இனிய பின்னணி இசையோடு  பாடல்கள் பாடியது வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளை பரவசத்தில் ஆழ்த்தியது. மேலும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் கிறிஸ்து பிறப்பின் முக்கியத்துவ பாடல்களை பாடி மகிழ்ந்தனர்.



இதனைத்தொடர்ந்து, கிறிஸ்துமஸ் தாத்தா நடனமாடி, குழந்தைகளை மகிழ்வித்தபடி இனிப்புகள் மற்றும் பரிசுகளை வழங்கியது சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தது. பின்னர், இரவு உணவின் போது ரோஸ்ட் டர்க்கி என்றழைக்கப்படும் அசைவ உணவு சுற்றுலா பயணிகளுக்கு பரிமாறப்பட்டது.



Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...