நீலகிரி : உதகையில் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கிறிஸ்துமஸ் ஆராதனை பாடல்கள் பாடி இயேசு பிறப்பை கொண்டாடினர்.

நீலகிரி மாவட்டம் சுற்றுலா மாவட்டமாக திகழ்ந்து வருவதால் இம்மாவட்டத்திற்கு அதிகளவு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். குறிப்பாக, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சமயங்களில் வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க உதகையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் கிறிஸ்துமஸ் ஈவ் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், இயேசு பிறப்பின் நிகழ்வுகளையும், அவர் பிறப்பின் முக்கியத்துவம் குறித்தும் பாடல்கள் மூலமாக, இனிய பின்னணி இசையோடு பாடல்கள் பாடியது வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளை பரவசத்தில் ஆழ்த்தியது. மேலும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் கிறிஸ்து பிறப்பின் முக்கியத்துவ பாடல்களை பாடி மகிழ்ந்தனர்.

இதனைத்தொடர்ந்து, கிறிஸ்துமஸ் தாத்தா நடனமாடி, குழந்தைகளை மகிழ்வித்தபடி இனிப்புகள் மற்றும் பரிசுகளை வழங்கியது சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தது. பின்னர், இரவு உணவின் போது ரோஸ்ட் டர்க்கி என்றழைக்கப்படும் அசைவ உணவு சுற்றுலா பயணிகளுக்கு பரிமாறப்பட்டது.