திருப்பூர் : திருப்பூர் அருகே தலையில் கல்லைப் போட்டு வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் 15 வேலம்பாளையம் அருகில் உள்ள அமர்ஜோதி கார்டனையடுத்து, கண்மணி கார்டன் என்ற காட்டுப்பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் இன்று அதிகாலை சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து அந்த பகுதி மக்கள் திருப்பூர் 15 வேலம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், பிணத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில் அந்த வாலிபர் நேற்று இரவு தலையில் கல்லைப்போட்டு கொலை செய்து இருப்பது தெரிய வந்தது.

கொலை செய்யப்பட்ட வாலிபர் யார் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. கொலை செய்யப்பட வாலிபர் யார்..? எதற்காக கொலை செய்யப்பட்டார்..? என்பது உள்ளிட்ட விவரங்களை போலீசார் விசாரித்து வருகின்றனர்.