நீலகிரி : பி.எஸ்.என்.எல். மற்றும் கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுடன் இணைந்து நீலகிரி மாவட்டத்தில் முதன்முறையாகக் கண்ணாடி இழை இன்டெர்நெட் சேவை தொடங்கப்பட்டது.

இந்த சேவையை பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் நீலகிரி மாவட்டத்தின் முதன்மை பொதுமேலாளர் முரளிதரன் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக, குன்னுார் மற்றும் மவுண்ட் பிளசண்ட் வெலிங்டன் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இந்த சேவையை பெற்றுப் பயன்பெறலாம். அதிவேக இன்டெர்நெட் சேவை மற்றும் 24 மணிநேரம் இலவச வாய்ஸ் அழைப்புகள் வசதி உள்ளது. இந்த சேவையின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் வீடுகளில் உள்ள ஸ்மார்ட் கருவியை வைபை வசதியையும், கண்காணிப்பு கேமராக்களையும் இயக்க முடியும்.

நீலகிரி மாவட்டத்தின் இதர பகுதிகளிலும் படிப்படியாக வெகுவிரைவில் இந்த சேவையை வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது. இதற்காக, நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கேபிள் டிவி ஆப்ரேட்டர்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.